
மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறைந்த குடும்பப் பெண்ணுக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது, இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
