
வவுனியாவில் பெண்ணை தாக்கி தொலைபேசி கொள்ளை!
வவுனியா ஓமந்தை A9 வீதியில் வியாழக்கிழமை காலை பத்து மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இருவர், குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர்
பாதிக்கப்பட்ட பெண்கள் அதேவேளையில் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து, உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப் பிடித்துள்ளனர்
கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
