ஒரே பாலின திருமணம் சட்ட பூர்வமாக்கிய நாடு: 180 ஜோடிகளுக்கு இன்றே திருமணம்

தெற்காசிய நாடான தாய்லாந்து, இன்று வியாழக்கிழமை முதல் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

புதிய திருமணச் சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு இன்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் வழங்கப்படுகின்றன, மேலும் சொத்துக்களை நிர்வகிக்கவும், மரபுரிமையாகவும் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இன்று 180 ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்