
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவு கட்டணம், 450 ரூபாவிலிருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படும், என்று அவைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த விலை திருத்தம், சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பு சலுகை விலையில் உணவைப் பெற்றுக்கொண்டிருநதனர் என்றும், நாடாளுமன்றத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்