தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பரீட்சை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், முடிவுகளை வெளியிட முடியவில்லை, என்று பிரதமர் தெரிவித்தார்.

இருப்பினும், நீதிமன்ற வழக்கு சமீபத்தில் முடிவடைந்து, அதன் பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக, பிரதமர் அமரசூரிய கூறினார்.

விடைத்தாள் திருத்தும் செயல்முறையை விரைவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்த அவர், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க