
2000 ரூபா பெறுமதியான ரயில் டிக்கட்டுகள் 16000 ரூபாவிற்கு விற்பனை: ஒருவர் கைது
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன கடந்த வாரம் ஒன்லைன் ரயில் டிக்கட்டுகளை அறிமுகம் செய்திருந்தார். இவ்வாறு அறிமுகம் செய்து 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த டிக்கட்டுகளை கொள்வனவு செய்த குழுவொன்று சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து கொழும்பு – கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்கும் மோசடி நடத்தப்படுவதாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய துணை அமைச்சர் சுட்டி காட்டிய அதே வேளை குற்றப் புலனாய்வுத் துறையிலும் புகார் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குழு 2000 ரூபா மதிப்புள்ள ரயில் டிக்கட்டுகளை 16000 ரூபாவிற்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலைய வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகள் இதற்கு ஆதரவளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்