தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் கூறுகிறார்.

தேங்காய் சார் பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் கையிருப்புக்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடின் நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க