திருகோணமலை சம்பூரிலும் கரையொதுங்கிய மர்மபொருள்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை ,சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் போயா வடிவிலான பொருளொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது. இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.

பிரதேச மக்கள் கடற்கரையில் ஒதுங்கிய பொருளை அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.