
கிளிநொச்சி – ஐயன்குளம் ஏரியின் கரை உடைப்பு: நீரில் மூழ்கிய வயல்கள்
கிளிநொச்சி – ஐயன்குளம் ஏரியின் கரை இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியின் இரு கரைகளும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான நிலங்கள் மற்றும் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், ஏரியின் கரைகளைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்