
கிழக்கு மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியது!
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நேற்று திங்கட்கிழமை மூடப்பட்டிருந்தன.
இந்தநிலையில், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன.
தற்போது, காலநிலையின் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில், பாடசாலைகளை மீண்டும் இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் எதிர்வரும், 25 ஆம் திகதி இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
