கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது
தாய்லாந்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் இலங்கை இராணுவத்தின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்