வீதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-பதுளை நிருபர்-

மடூல்சீமை பிட்டமாறுவை றோபேரி இரட்டை போக்கு எனப்படும் இடத்தில் வீதியில்   ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மீகாகியூல பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிட்டமாறுவ வீதியில் றோபேரி இரட்டைபோக் எனப்படும் பகுதியில் வயோதிபர் ஒருவர் கீழே விழுந்த நிலையில் காணப்படுவதாக அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மடூல்சீமை பொலிஸார் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மடூல்சீமை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்