மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார்.

அவர் ரயிலில் பயணம் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இதேவேளை மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏறும்போது எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள அசுத்தமான நிலைமைகள், பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான ரயில்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பயணிகள் அமைச்சரிடம் தங்கள் அதிருப்தியையும் புகார்களையும் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க