சம்மாந்துறையில் வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு சாவாற்றின் பனையடி இறக்கம் உடைப்பெடுத்துள்ளமையினால் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதேவேளை சாவாறு வைத்தியசாலை பாம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடசேலியா விவசாய நிலம் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது,

“கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சாவாறு பனையடி இறக்கம் உடைந்த நிலையில் காணப்பட்டது. இது உரியமுறையில் சீரமைக்கப்படாமையினால் இன்று இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பும் உரிய அதிகாரிகளே அதுமட்டுமின்றி இவர்களுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்