நெல்லுக்கான நிர்ணய விலையைக் கோரும் விவசாயிகள்!

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் இன்னும் அறிவிக்காததால் தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பெரும் போகத்தில் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு குறைந்தபட்சம் 140 ரூபாய் நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் செங்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் உற்பத்தி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்