தந்தையுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மகள் உயிரிழப்பு!

தந்தையுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த, மகள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கண்டி மைலாப்பிட்டிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில், 20 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி உடுதெனிய பகுதியை சேர்ந்த குறித்த யுவதி,  தனது தந்தை மற்றும் தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியை ஓட்டி சென்ற தந்தை காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க