மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற இரட்டை கொலை : 3 பேர் கைது!

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் கடந்த வியாழக்கிழமை, இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவ சிப்பாய் உட்பட மூன்று சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கான நோக்கம் அல்லது சந்தேக நபர்களின் அடையாளம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.