மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு கொழும்பு பிரதானவீதியில் மன்னம்பிம்பிட்டி கல்லலை பகுதியில் வெள்ளநீர் பிரதான வீதியை குறுக்கறுத்து பாய்வதால் தற்போதுவரை பெரியஅளவிலான தனியார் மற்றும் அரச பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக பலநீர்நிலைகள் திறந்து விடப்பட்டுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அயாயநிலை தோன்றியுள்ளதாக எமது மன்னம்பிட்டி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இன்றிரவு பயணம் மேற்கொள்ளும் சிறிய ரக மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வெள்ள நிலையை கருத்தில் கொண்டு அவதானமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்