காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கு : காதலி குற்றவாளி என தீர்ப்பு!
இளைஞர் ஒருவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் உயிரிழந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் – நெய்யாட்டின்கரா நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஷரோன் ராஜ் (வயது 23) என்ற இளைஞன் அருந்திய குளிர்பானம் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ராஜ் உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
வைத்திய சிகிச்சையின் போது ராஜ் கடுமையான விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்தியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது காதலியான கிறீஸ்மா (வயது 22) என்ற யுவதி இராணுவவீரர் ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயமாகியதை அடுத்து காதலனான ராஜ்ஜிடம் தங்களது காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்
எனினும் ராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை
இதனால் கிறீஸ்மா தனது காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் கிறீஸ்மா உட்பட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
அதன் பின் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது கிற}ஸ்மாவே ராஜ் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்தார் என்பது உறுதி செய்யப்பட்டு வழக்குகளின் முடிவில் நேற்று வெள்ளிக்கிழமை இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று சனிக்கிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்