
தந்தைக்கு தெரியாமல் அவரின் மோட்டார் சைக்கிளை விற்ற மகன்!
-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் “Hero Passan Pro” வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக, மோட்டார் சைக்கிளின் உரிமையாளரினால், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிளும், சந்தேக நபரும் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவம் தொடர்பில் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக முறைப்பாடு செய்தவரின் மகன், தந்தைக்கு தெரியாமல் அவரின் மோட்டார் சைக்கிளை தனக்கு விற்றதாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபரின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
