
நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க கோரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ. கே. சேமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே அதன் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பச்சை அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் அடுத்த போகத்திற்கு முன்னர் நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்க வேண்டும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ. கே. சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
