அம்பாறை செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்திற்கு உட்பட்ட, செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது.

குறித்த பாலம் பற்றி உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை, என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

செனவட்டை, நெடியாள்ளகண்டம், கொக்கநாரை போன்ற வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும்.

எதிர்வரும் மாதத்தில் இப் பகுதியில் விவசாய அறுவடை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முதல் பெய்த கனமழை காரணமாக, பல வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தது, அதிகாரிகள் பலர் நீரில் மூழ்கிய நிலங்களை பார்வையிட்டு சென்ற போதும், இது வரை எந்த நஷ்ட ஈடும் அரசாங்கம் வழங்கவில்லை, என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24