மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் விபத்து : வாகன சாரதி தப்பியோட்டம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்,  இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன், கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில், பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண் ஒருவரை மோதித் தள்ளியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த குறித்த பெண், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.