இருவேறு பகுதிகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

கொழும்பு – வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பதுளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெயியன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்