
பலத்த காற்றினால் காட்டுத்தீ மேலும் மோசமடையும் அபாயம்!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலத்த காற்று வீசுவதால், காட்டுத் தீப்பரவல் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத் தீ பரவல் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீயணைப்பு படையினர் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
