கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

அம்பாறையில் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 8000 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்