கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

அம்பாறையில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை, திருவள்ளுவர் புரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் புரம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 15000 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்