சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னக்கிராமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

மலையடிக்கிராமம் 3 பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்