ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் திங்கட்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

விஜயத்தின் போது, ​​தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்