கடத்தப்பட்ட மாணவி கண்டு பிடிக்கப்பட்டார்!

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,  இருவரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாணவி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்