ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.வண்ணார்ப்பண்ணையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்