யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
-யாழ் நிருபர்-
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – வடமராட்சி வீதி வல்லை பகுதியில் புதன் கிழமை இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, பருத்தித்துறை – புற்றாளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மதிவண்ணன் என்ற 21 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மாட்டுடன் மோதுண்டு பின்னர் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்