திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 515 அதிர்வுகள் பதிவு

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேற்று புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் இன்று தெரிவித்துள்ளது.

சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இதில் 488 அதிர்வுகள் 3.0 ரிச்டர் அளவுக்கு கீழும், 27 அதிர்வுகள் 3.0 ரிச்டர் அளவிலும்,24 அதிர்வுகள் 3.0 முதல் 3.9 வரையிலான ரிச்டர் அளவிலும், 3 அதிர்வுகள் 4.0 முதல் 4.9 வரையிலான ரிச்டர் அளவிலும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்