போலி ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள், போலிப் பிறப்புச் சான்றிதழ்கள், போலித் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலிக் கல்விச் சான்றிதழ்களை விற்பனை செய்த மூவர் கண்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் குழுவினால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோசடிச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்குத் தலைமை தாங்கியவர்கள் அனுராதபுரம் பகுதியில் உள்ள அபயபுர, ஹூரிகஸ்வெவ, மீகலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், போலி ஆவணங்களைத் தயாரித்து கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு விற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.