ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் : கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில்!
அம்பாறையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்திய போது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில், சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி, ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை, ஆறு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து, இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்களை நேற்று நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
இதற்கு அமைய, சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரும் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரும் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி ஏனைய சந்தேக நபர்கள் ஐவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்