வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை -ரொட்டரிக் கழகத்தினால் இதற்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

வெருகல் பிரதேச செயலகத்தில் வைத்து , பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் தலைமையில் ரொட்டரிக் கழகத்தினால் சுமார் 200 குடும்பங்களுக்கான பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.