பரீட்சை திருப்தியாக செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த மாணவி!
-யாழ் நிருபர்-
பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி திங்கட்கிழமை பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை வெளியே சென்றவேளை குறித்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ, 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்