வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு

புத்தளம் – கல்லடி பகுதியில் வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இரண்டரை வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சிறுமி தனது தாயின் வலிநிவாரணி மருந்தை தவறுதலாக உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்