மது போதையில் வாகனங்களை செலுத்திய 383 சாரதிகள் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மது போதையில் வாகனங்களை செலுத்திய 383 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, பண்டிகை காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செல்லும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மது போதையில் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos