யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக இரண்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்