தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்