உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றது இலங்கை!
அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியை இந்தியா 4 ஆவது முறையாக நடத்துகிறது.
இந்தப் போட்டிக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இதுவரை இலங்கை அணிக்கு மேலதிகமாக இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.