சிறப்பாக இடம்பெற்ற நாகராஜ பூஜை
-யாழ் நிருபர்-
பருத்தித்துறை – தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தின் 16 ஆம் நாள் பூஜையான நாகராஜ பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
ரூபன் குருசாமி தலைமையில், சோ.தனஞ்செயன் குருக்கள் இணைந்து நடாத்திய பூஜையில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.
இதில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்