கடந்த 24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி 13 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான விபத்துகளில் 13 பேர் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன், மாரவில,அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெபிதிகொல்லேவ மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறு விபத்து பதிவாகியுள்ளன.

இதேவேளை இந்த ஆண்டு மொத்தம் 2,243 பேர் வீதி விபத்துகளில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 13 வரையான காலப்பகுதியில் 2,141 உயிரிழப்பு விபத்துகள் உட்பட 22,967 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் குறித்த காலப்பகுதியில் 6,500 பாரிய விபத்துகளும் 9,127 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக பண்டிகைக் காலத்தில் விபத்துகளைக் குறைக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்