நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி!
நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 28,500 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இந்த அரிசி தொகைக்கு இலங்கை சுங்கம் இறக்குமதி வரியாக 4.3 பில்லியன் ரூபாயை அறிவித்துள்ளது.
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
இதேவேளை, அரசாங்கம் இறக்குமதி செய்த முதல் அரிசி தொகை எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.