முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதி ( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி, கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.