தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்!

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.