மியன்மார் அகதிகளுக்கு திருமலை பெண்கள் அமைப்பால் உதவி
-மூதூர் நிருபர்-
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த படகில் வருகை தந்தோர் தற்போது திருகோணமலை -அஷ்ரப் துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மார் அகதிகளுக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையப்பினர் இன்றைய காலை மற்றும் பகல் உணவுகளையும் வழங்கினர்.அத்தோடு அத்தியவசிய ஆடைகளையும் பெண்கள் வலையப்பினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை கடற்படையினர், துறைமுக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மியன்மார் அதிகாரிகளுக்கு தகவல் வழங்குவதற்கு தேவையான உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்