மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்
-வெல்லாவெளி நிருபர்-
சீரற்ற கால நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வெல்லாவெளி, மண்டூர் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவகிரி குளத்திலிருந்து இரண்டு வான்கதவுகள் நான்கு அடி ஆழத்தில் திறக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறும் நீர் வெல்லாவெளி மண்டூர் பிரதான பாதை ஊடக வட்ட வளை அணைக்கட்டு மற்றும் முகத்துவாரம் முடக்குமுடி அணைக்கட்டு ஊடாக ஆற்றை சென்றடைகின்றது.
எனினும் இவ்வாறு வெளியேற்றப்படும் மேலதிக நீர் ஆற்றை சென்றடைவதற்கு ஏதுவான அளவில் மேல் குறிப்பிட்ட இரண்டு அணைக்கட்டுக்களும் இல்லாத காரணத்தினால் வயல் நிலங்களை பாதித்துக் கொண்டு வெள்ள நீரானது ஆற்றை சென்றடைகின்றது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் வட்டவளை அணைக்கட்டினை அகலப்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் வயல் நிலங்களை பாதுகாக்க முடியும் என தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்