மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது மேலதிக மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மாதாந்த உதவித் தொகையாகத் தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்